ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு பிணை கிடைத்தது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 பிப்ரவரி, 2013 - 14:41 ஜிஎம்டி


கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள உலக பராலிம்பிக்ஸ் வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு தென்னாப்பிரிக்க நீதிபதி ஒருவர் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரச தரப்பு சட்டவாதிகள் தமது தரப்பு வாதத்தில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர் என்றோ அல்லது அவர் வன்செயலில் ஈடுபடுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதையோ விபரிக்க தவறிவிட்டனர் என்று தனது தீர்ப்பில் நீதிபதியான டெஸ்மண்ட் நாயர் கூறியுள்ளார்.

தனது பெண் தோழியான ரீவா ஸ்டீன்காம்ப் அவர்களை கொலை செய்ததாக ஆஸ்கர் மீது குற்றஞ்சாட்டப்படுள்ளது.

ஆனால், வீட்டினுள் வேறு யாரோ புகுந்துவிட்டதாக தவறாகக் கருதி, தான் தனது தோழியை சுட்டுவிட்டதாக ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.