உயர் நிர்வாகத்தில் ஊழல் என்ற செய்தியை வத்திக்கான் நிராகரித்துள்ளது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 பிப்ரவரி, 2013 - 13:26 ஜிஎம்டி

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் பதவி விலகத் தயாராகிவரும் நிலையில், வத்திக்கான் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட நிர்வாகத்தில் உட்சதி, அச்சுறுத்தி பணிய வைத்தல் மற்றும் ஊழல் ஆகியன காணப்படுவதாக வந்த ஊடக செய்திகளுக்கு வந்திக்கான் ஆத்திரத்துடன் பதிலளித்துள்ளது.

அவதூறு, பிழையான தகவல்கள் மற்றும் வதந்திகள் மூலம் திருச்சபையில் குழப்பத்தை ஏற்படுத்தவும், திருச்சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தவும் சிலர் முயற்சிப்பதாக வத்திக்கானின் சார்பில் பேசவல்ல அருட்தந்தை ஃபெடரிகோ லொம்பார்டி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் கார்டினல்கள், அடுத்த போப்பாண்டவருக்கான தேர்வில் கலந்துகொள்ளக் கூடாது என்று அமெரிக்க ஊடகங்கள் விமர்சிப்பதையும் அவர் கண்டித்துள்ளார்.

இது ஒரு அனாவசியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வத்திக்கான் வானொலி இணையத்தில் எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.