போப்பாண்டவர் பெனடிக்டின் இறுதி ஞாயிறு பூசை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2013 - 14:14 ஜிஎம்டி

திருச்சபையை தான் கைவிடவில்லை என்றும், ஆனால், ஆண்டவர் தன்னை தன்னிடம் மலையேறி வருமாறு அழைக்கிறார் என்றும் போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் வியாழக்கிழமை தனது பதவியை துறப்பதற்கு முன்னதாக இறுதியாக நடத்திய ஞாயிறு தின பூசையில் கூறியிருக்கிறார்.

ரோம், புனித பீட்டர் சதுக்கத்தில், பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள், சுற்றுலாப்பயணிகள் மத்தியில் தனது சாளரத்தின் வழியாகப் பேசிய போப்பாண்டவர், பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் தான் தொடர்ந்தும் திருச்சபைக்கு பணிசெய்து அன்பு செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை அவர் இறுதியாக பொதுமக்கள் முன்பாக அதிகாரபூர்வமாக தோன்றுவார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக அவர் 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அதேவேளை, அடுத்த போப்பாண்டவரை தெரிவு செய்வதற்காக உலகெங்கிலும் இருந்து கார்டினல்கள் வத்திக்கானை வந்தடைந்துகொண்டிருக்கிறார்கள்.

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த திருச்சபையின் மீதான குற்றச்சாட்டுக்கள் இந்த நடைமுறையின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.