ஒய்வுபெறும் ஆசீர்வாதப்பருக்கு புதிய பெயர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2013 - 12:52 ஜிஎம்டி
பாப்பரசர் ஆசீர்வாதப்பர் இம்மாதத்துடன் ஒய்வு பெறுகிறார்

பாப்பரசர் ஆசீர்வாதப்பர் இம்மாதத்துடன் ஒய்வு பெறுகிறார்

ஒய்வு பெற்றுச் செல்லும் பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பரின் புதிய அடைமொழியை வத்திகான் வெளியிட்டுள்ளது.

முன்னாள் திருத்தந்தை என்று அவர் அழைக்கப்படுவார். வழக்கம் போலவே அவர் ஹிஸ் ஹோலினஸ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவார்.

பாப்பரசர் அணியும் வெள்ளை அங்கியை ஒய்வு பெற்ற பிறகும் அவர் தொடர்ந்து அணிவார். ஆனால் தனது தங்க மோதிரத்தை அவர் திரும்ப அளிப்பார்.

அவர் அமர்ந்திருந்த நாற்காலி வத்திகானின் சம்பிரதாயப்படி அழிக்கப்படும்.

கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பாப்பரசர் தற்போதுதான் ராஜினாமா செய்துள்ளார். எனவே கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயங்கள் குறித்து ஒருவித தெளிவின்மை நிலவுகிறது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பது தொடர்பில் தான் எவ்வித பங்களிப்பையும் செய்யப் போவதில்லை என்று ஆசீர்வாதப்பர் ஏற்கனவே கூறிவிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.