பாப்பரசர் இறுதியாக மக்கள் முன்பாக தோன்றினார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 பிப்ரவரி, 2013 - 12:05 ஜிஎம்டி

பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் தான் பதவி விலகுவதற்கு முன்னதாக இறுதியாக பொதுமக்கள் முன்பாக பவனியாக வந்து தோன்றியுள்ளார்.

கடந்த 600 ஆண்டுகளில் தானாகவே பதவி விலகும் முதலாவது பாப்பரசர் இவராவார்.

பதவி விலகுவது என்ற தனது முடிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தான் முழுமையாக அறிவேன் என்றும், ஆனால் திருச்சபை மீதும், ஆண்டவரின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தாம் மிகுந்த மன அமைதியுடன் இருப்பதாகவும் அவர் புனித பீட்டர் சதுக்கத்தில் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பாக பேசினார்.

அண்மைக்காலமாக தனது பலவீனம் அதிகரித்து வருவதை தான் உணர்ந்ததாகவும், நல்ல முடிவை எடுப்பதற்கு தனக்கு உதவ வேண்டும் என்று ஆண்டவரைக் வேண்டிக்கொண்டதாகவும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் கூறினார்.

ஒரு பாப்பரசராக இருப்பதில் உள்ள மகிழ்ச்சி மற்றும் சிரமங்கள் ஆகியவை குறித்து அவர் பேசினார்.

தனக்கு அடுத்தபடியாக பாப்பரசராக வர இருப்பவருக்காக தான் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் வாரங்களில் புதிய பாப்பரசர் தெரிவாவார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.