வங்கதேச வன்செயல்களில் மேலும் 3 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மார்ச், 2013 - 12:18 ஜிஎம்டி


வங்கதேசத்தில் இஸ்லாமியக் கட்சி ஒன்றின் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நடக்கும் வன்செயல்களில், இடம்பெற்ற புதிய நிகழ்வுகளில் குறைந்தபட்சம் 3 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

துறைமுக நகரான சிட்டாஹொங்கில் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தி வருகின்ற ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்களைக் கலைக்க ரப்பர் குண்டுகள் மூலமும், நிஜ தோட்டாக்களைக் கொண்டும் பாதுகாப்புப் படையினர் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஒரு கோயிலும், சிறுபான்மை இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுளனர்.

ஜமாத் கட்சியின் துணைத்தலைவர் டெல்வார் ஹொசைன் சயதீ அவர்களுக்கு கடந்த வியாழக்கிழமையன்று ஒரு போர்க்குற்ற நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததை அடுத்து நடந்த வன்செயல்களில், இதுவரை வங்கதேசம் எங்கிலும் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் சித்ரவதைகளைச் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.