மலேசியப் பகுதியை ஆக்கிரமித்தவர்களை சரணடைய எச்சரிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மார்ச், 2013 - 12:58 ஜிஎம்டி


மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார்.

அந்த மோதல்களில் இரு மலேசிய காமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர்.

மலேசிய மாநிலமான சபாவில் குறைந்தபட்சம் 100 பிலிப்பைன்ஸ்காரர்களாவது இரு வாரங்களுக்கு முன்னர் வந்து தரையிறங்கினார்கள்.

இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள்.

இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அதிபரும் கேட்டுக்கொண்டுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.