'சிரியாவில் அல்கைதாவுக்கு இடம் கிடையாது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 மார்ச், 2013 - 11:10 ஜிஎம்டி

சிரியாவின் எதிர்காலத்தில் அல்கைதாவுக்கோ அல்லது ஜிகாதிகளுக்கோ எந்தவிதமான பங்கும் கிடையாது என்று சிரியாவின் கிளர்ச்சிப் படையான ''சிரியாவை விடுவிப்பதற்கான இராணுவத்தின்'' தளபதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிரணிப் படையில் 2 வீதத்துக்கும் குறைவாகவே தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று ஜெனரல் சலீம் இட்ரீஸ் தெரிவித்துள்ளார்.

சிரியாவுக்கு எதிரான ஆயுதத்தடை என்பது தற்போதைக்கு அதிபர் அசாத்தின் அரசாங்கத்துக்கே சாதகமாக அமையும் என்பதால் அதனை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

எதிர்த்தரப்பினர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் வெற்றி பெறுவார்கள் என்றும், ஆனால், தடை இருக்கும் பட்சத்தில் வெற்றிபெற நீண்ட காலம் பிடிக்கும் என்றும், அதிக உயிர்களைக் காவுகொடுக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சிரியாவின் போர் காரணமாக அங்கிருந்து தப்பி ஓடும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டது என்று ஐநாவின் அதிகாரபூர்வ தகவல் கூறுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.