இறந்த உடலைப் பாடம் செய்வது மார்க்ஸிய வழிமுறையா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 மார்ச், 2013 - 17:29 ஜிஎம்டி

பாடம் செய்து பாதுகாக்கப்பட்ட லெனின் உடல்

மார்க்ஸிய மற்று சோஷலிஸ நாடுகளின் தலைவர்கள் இறந்த பின், அவர்களின் உடல்களை பாடம் செய்து பாதுகாக்கும் போக்கு, மார்க்ஸிய சிந்தனைக்கு முரணானதா ?

சமீபத்தில் மறைந்த வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹ்யூகோ சாவேஸின் உடல் இவ்வாறு பாடம் செய்யப்பட்டு ராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரும், சோவியத் புரட்சியின் தலைவருமான விளாதிமிர் லெனின் மற்றும் சீனப் புரட்சியின் தந்தை மாசேதுங் போன்றோரின் உடல்கள் பாடம் செய்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

கடவுள் மறுப்பு, தனிநபர் துதி மறுப்பு போன்ற கொள்கைகளைக் கொண்ட மார்க்ஸிய சித்தாந்தத்தில் இது போன்ற நடைமுறைகளுக்கு இடமில்லை. இது ஒரு அருவெறுப்பைத் தரும் செயல் என்கிறார் மார்க்ஸிய எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை.

ராஜதுரை பேட்டி

இறந்த பின்னும் 'இருக்கும்' தலைவர்கள்

வெனிசுவேலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் மரணத்தை அடுத்து, இறந்த தலைவர்களின் உடல்களை பாடம் செய்து பாதுகாப்பது மார்க்ஸிய வழிமுறையா என்பது குறித்த சர்ச்சை.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

லெனின் அல்லது மாசேதுங்கின் பாடம் செய்யப்பட்ட உடல்களை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் அத்தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்ல முடியாது என்கிறார் அவர் .

மேலும்,லெனின், மாசேதுங் போன்றோரின் உடல்கள் பாடம் செய்து வைக்கப்பட ஏற்பாடு செய்த அவர்களுக்கு பிந்தைய தலைமைகள் எல்லாமே அவர்கள் காட்டிய கொள்கைப் பாதையிலிருந்து திசை மாறியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ராஜதுரை.

கம்யூனிச சித்தாந்தத்தின் மிகப் பெரும் ஆசான்களான, மார்க்ஸோ அல்லது ஏங்கல்ஸோ இது போல தங்களது உடல்களை பாடம் செய்து வைக்கவேண்டும் என்று கூறவில்லை. உண்மையில் ஏங்கல்ஸ் தனது உடல், எரியூட்டப்பட்டு கடலில் கரைக்கப்படவேண்டும் என்று அறிவித்திருந்தார் என்கிறார் ராஜதுரை.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.