பிரஞ்சு பணயக் கைதியை அல்கைதா கொன்றுவிட்டது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 மார்ச், 2013 - 10:13 ஜிஎம்டி
வர்த்தகருடன் இன்னொரு பிரஞ்சு நாட்டவரையும் பிடித்துவைத்திருந்த படத்தை அல்கைதா வெளியிட்டுள்ளது.

வர்த்தகருடன் இன்னொரு பிரஞ்சு நாட்டவரையும் பிடித்துவைத்திருந்த படத்தை அல்கைதா வெளியிட்டுள்ளது

மாலியில் 2011-ம் ஆண்டு தம்மால் பிடித்துச் செல்லப்பட்ட பிரஞ்சு வர்த்தகரை கொன்றுவிட்டதாக அல்கைதாவின் வட ஆப்ரிக்க பிராந்திய போராளிகள் அறிவித்துள்ளனர்.

மாலியில் பிரஞ்சுப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் நோக்குடனேயே பிலிப்பே வேர்டன் என்ற அந்த வர்த்தகரை கடந்த 10-ம் திகதி கொன்றுவிட்டதாக மொரிட்டானியாவிலிருந்து இயங்கும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அல்கைதா அறிவித்துள்ளது.

ஹொம்போரி நகரில் வைத்து வர்த்தகர் வேர்டனும் இன்னொரு பிரஞ்சுப் பிரஜையும் பிடித்துச்செல்லப்பட்டனர்.

அல்கைதா தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் மாலியின் தலைநகருக்குள் நுழையமுற்படுவதைத் தடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் மாலிக்குள் படைகளை அனுப்பியது.

அண்மைய வாரங்களாக பிரஞ்சு தலைமையிலான படைகள் வடக்கு மாலியின் மலைப்பிரதேசங்களில் ஆயுததாரிகளுடன் மோதிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.