பிரிட்டனில் கடும்போக்குவாதம் குறித்து புதிய குழு

  • 26 மே 2013

இஸ்லாமிய தீவிரவாதத்தை கையாள்வதற்கான பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் அவர்களின் யுக்திகள் குறித்து அண்மைக்காலமாக வருகின்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலான கடும்போக்குவாதத்தை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து ஆராய செயலணிக் குழு ஒன்றை அமைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் குழுவில் மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை தலைவர்கள் இடம்பெறுகிறார்கள்.

கடும்போக்குவாதத்தை பிரச்சாரம் செய்பவர்கள் மீது என்ன அதிகாரங்களை பிரயோகிக்கலாம் என்பவை உட்பட யதார்த்தமாக எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு கவனம் செலுத்தும்.

இஸ்லாமிய சுலோகங்களை ஒலித்த இருவரால் புதனன்று லண்டனில் ஒரு பிரிட்டிஷ் படைச்சிப்பாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த நகர்வு வந்திருக்கிறது.

கடும்போக்குவாதத்தை தடுப்பதற்கு உதவுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நிதியை 2011ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் குறைத்திருந்தது.