அமெரிக்கா: க்ளிவ்லண்ட் சேரியில் சீரியல் கொலை தேடுதல்கள்

கிளிவ்லண்ட் பகுதியில் அண்மைக் காலத்தில் நடந்துள்ள, காணாமல்போன பெண்கள் சம்பந்தப்பட்ட மூன்றாவது பெரிய சம்பவம் இது.
Image caption கிளிவ்லண்ட் பகுதியில் அண்மைக் காலத்தில் நடந்துள்ள, காணாமல்போன பெண்கள் சம்பந்தப்பட்ட மூன்றாவது பெரிய சம்பவம் இது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் க்ளிவ்லண்ட் பறநகரப் பகுதியில் தொடர் கொலையாளி (சீரியல் கில்லர்) என்று சந்தேகிக்கப்படும் ஒருவனால் கொல்லப்பட்டுள்ள மூன்று பெண்களின் சடலங்கள் பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்ப்டுள்ளது.

இதனையடுத்து இந்த சேரிப்புறத்தில் மேலும் சடலங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீண்டும் தேடுதல் நடந்துவருகிறது.

பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கின்ற ஒருவரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்குள் இந்த மூன்று பெண்களும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

க்ளிவ்லண்டில் காணாமல்போன பெண்கள் சம்பந்தப்பட்ட, அண்மைக்காலத்தில் நடந்துள்ள மூன்றாவது பெரிய சம்பவம் இது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 11 பெண்களைக் கொன்ற அந்தனி சோவல் என்ற சிரியல் கில்லருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதம், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போயிருந்த மூன்று பெண்கள் வீடொன்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.