படகு அகதிகளைத் தடுக்க மீன்பிடிப் படகுகளை விலைக்கு வாங்கும் திட்டம்

  • 23 ஆகஸ்ட் 2013
Image caption ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல வியட்நாமியர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகு ஒன்று

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக வெற்றி பெறக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் டோனி அபொட், அகதிகள் படகுகளை தடுப்பதற்கு புதிய உத்தியொன்றைக் கையாள திட்டமிட்டுள்ளார்.

இந்தோனேசியாவிலுள்ள மீன்பிடி படகுகள் மனிதக் கடத்தல்காரர்களின் கைகளுக்கு போகாமல் அவற்றை தாமே விலைகொடுத்து வாங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அபொட் கூறுகிறார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஆஸ்திரேலியா நோக்கி கடத்திவர பயன்படுத்தப்படும் படகுகளை பலகோடி டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்குவது தான் டோனி அபொட்டின் திட்டம்.

இந்தத் திட்டத்தை ஆளும் தொழிற்கட்சி கேலி செய்துள்ளது.

அடுத்த மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம் முக்கிய பிரச்சாரப் பொருளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.