இளவரசர் வில்லியம் ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்

  • 12 செப்டம்பர் 2013

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் , பிரிட்டிஷ் படைகளில் ஏழாண்டுகள் பணியாற்றிய பின்னர், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார்.

அவர் பிரிட்டிஷ் விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி விமானியாக தனது கடைசி பணி நாளை செவ்வாய்க்கிழமை முடித்தார்.

பிரிட்டிஷ் அரச பரம்பரையில், முடிசூடத் தயாராக இருப்பவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் இவர், இந்த மாற்றம் நிகழும் ஆண்டு என்று வர்ணிக்கப்படும் ஆண்டில், பொதுச்சேவை செய்ய பல வாய்ப்புகளைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார் என்று கென்சிங்டன் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளவரசர் வில்லியம் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தமாட்டார், ஆனால் அவரது சேவை தொடர்பான பணிகளை, குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில், விஸ்தரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.