தேவாலயத்தில் தாக்குதல் - 75 பேர் பலி

  • 22 செப்டம்பர் 2013
தாக்குதலுக்குள்ளான தேவாலயம்
Image caption தாக்குதலுக்குள்ளான தேவாலயம்

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெஷாவர் நகரில் நடந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து, மக்கள் திரும்பிச் செல்லுகையில் இரு தற்கொலை குண்டுதாரிகள் தாம் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது இதற்கு முன்பு நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு இஸ்லாமியக் குழுக்கள் மீதே பழி போடப்பட்டிருந்தது.

அதே நேரம், அங்கே ஷியாக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.