ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம்

  • 30 அக்டோபர் 2013

வழமையாக குளிர் காலத்தில் சூரிய ஒளி இன்றி இருண்டு கிடக்கும் நோர்வேயின் ஒரு நகரான யூகானுக்கு மூன்று இராட்சத கண்ணாடிகள் மூலம் முதற்தடவையாக இந்த ஆண்டு ஒளி கிடைத்துள்ளது.

ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த நகருக்கு, அதனைச் சூழ்ந்துள்ள மூன்று மலைகளால் குளிர் காலத்தில் 6 மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. அந்த மலைகள் சூரிய ஒளியை அந்த நகருக்கு கிடைக்காமல் மறைத்துவிடும்.

ஆகவே இந்த நகருக்கு இராட்சத கண்ணாடிகளை பயன்படுத்தி இந்தக் காலகட்டத்தில் ஒளி வழங்க வேண்டும் என்ற யோசனை 100 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கான தொழில்நுட்பம் 2003 இல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

குளிர்காலத்தில் முதல் தடவையாக சூரியனை வரவேற்க இந்த நகரம் தற்போது பெரும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்பாராத ஒளி கண்பார்வையை கெடுத்துவிடலாம் என்பதற்காக அந்த நகர பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு எல்லாம் கூளிங்கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.