ஏமன் பாதுகாப்பு அமைச்சின் மீது தாக்குதல் : 20 பேர் பலி

  • 5 டிசம்பர் 2013
பாதுகாப்பு அமைச்சின் மீது தாக்குதல்
Image caption பாதுகாப்பு அமைச்சின் மீது தாக்குதல்

ஏமன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டு, மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

சனாவின் அல்-யாமன் மாவட்டத்தில் உள்ள அமைச்சின் வளாக வாசலில் ஒரு கார்க் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு, பின்னர் உள்ளேயிருந்திருக்கூடிய பயங்கரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையும் நடந்தது.

பெரும்பாலான ஆயுதபாணிகள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சட்ட அமைதியீனம் மற்றும் இராணுவப் பிளவு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, பிராந்திய கிளர்ச்சிக்காரர்களுடனும், அல்கைதாவுடனும் ஏமன் பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகிறார்கள்.