ஸ்பெயின் இளவரசி கிறிஸ்டினா நீதிமன்றத்தில்

  • 8 பிப்ரவரி 2014
Image caption இளவரசி கிறிஸ்டினா

ஸ்பெயின் மன்னர் ஹ்வான் கார்லோஸ்- இன் இளைய மகளான இளவரசி கிறிஸ்டினா ஊழல் மோசடி தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார்.

ஸ்பெயின் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவே.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இளவரசி பின்பக்க நுழைவாயில் மூலம் நீதிமன்றத்துக்குள் வந்தார்.

அதேநேரத்தில் கட்டடத்தின் மறுபுறத்தில் பெரும் எதிர்ப்புக் கோஷமொன்றைக் கேட்கக் கூடியதாக இருந்தது.

இளவரசி கிறிஸ்டினாவின் கணவரின் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில், அவர் விசாரிக்கப்படுகிறார்.

பல மில்லியன் டாலர்கள் அரச பணத்தை கிறிஸ்டினாவின் கணவர் சுருட்டிக்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இருவர் மீதும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இருவரும் குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.

நீண்டகாலமாக இழுபட்டுவரும் இந்த வழக்கு ஸ்பெயின் அரச குடும்பத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் முடியாட்சி முறைக்கான ஆதரவையும் குறைத்துள்ளது.