சௌதி அரேபியாவின் நீதிபதிகளுக்கு பயிற்சி மையம்

  • 25 பிப்ரவரி 2014
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption சௌதி அரேபிய நீதிபதிகளுக்கு பயிற்சி

சௌதி அரேபியா, அந்நாட்டின் நீதிபதிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு ஒரு பயிற்சி மையத்தை உருவாக்குகிறது.

சௌதி நீதிபதிகளின் செயல்பாடு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.

சௌதி நீதி அமைப்பில், தற்போது, நீதிபதிகள், கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை கவனத்தில் கொள்ளாமலேயே, வழக்குகளில் தீர்ப்புகளைத் தர முடிகிறது.

இது உறுதியற்ற நிலைப்பாடுகள் மற்றும் கேள்விக்குறிய முடிவுகளுக்கு இட்டுச்செல்கிறது என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

இது நாட்டில் முதலீடு செய்யக்கூடியவர்களை பயமுறுத்துகிறது என்று வர்த்தகர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் சௌதி அரேபியாவில் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கும் மதப்பழமைவாதிகள் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை நீண்டகாலமாகவே எதிர்த்து வந்துள்ளனர்.

நீதித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகள் சௌதி அரேபியாவின் மத மற்றும் கலாசார அடையாளத்துக்கு ஒரு அச்சுறுத்தல் என்று அவர்கள் கருதுகிறார்கள்.