கடல் அடித்துச் சென்ற முன்னாள் படையினரின் சடலங்கள்

  • 7 ஜூன் 2014
கடலால் அடித்துச் செல்லப்பட்ட முன்னாள் படையினரின் சடலங்கள் Image copyright NASA
Image caption கடலால் அடித்துச் செல்லப்பட்ட முன்னாள் படையினரின் சடலங்கள்

கடல் நீர் மட்ட அதிகரிப்பால், பசுபிக் கடலில் அமைந்துள்ள மார்சல் தீவுகளை சுற்றவரவுள்ள இரண்டாம் உலகப்போரில் உயிர் நீர்த்த படையினரின் புதைகுழிகளில் உள்ள சடல எச்சங்கள், அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஜெர்மனியில் ஐநாவில் காலநிலை குறித்து பேச்சுக்களின் போது உரையாற்றிய அந்த தீவுகளின் வெளியுறவு அமைச்சர் டொனி டெ பிரம் அவர்கள், ஜப்பானிய சிப்பாய்களினது என்று நம்பப்படும், 26 படையினரது எலும்புகளை கொந்தளித்து வந்த கடலலைகள் அடித்துச் சென்றதாக கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் என்பது தமது மக்களை பொறுத்தவரை அவர்களது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை என்றும், அது குறித்து அவசர நடவடிக்கை தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மார்சல் தீவுகளின் மிகவும் உயரமான பகுதியே கடல் மட்டத்தில் இருந்து வெறுமனே இரண்டு மீட்டர்கள் மாத்திரமே உயரமானதாகும்.