பர்மாவில் தொடரும் மதவன்முறைகளில் இருவர் பலி

  • 3 ஜூலை 2014
பர்மாவில் மதக்கலவரம் நீடிக்கிறது
Image caption பர்மாவில் மதக்கலவரம் நீடிக்கிறது

பர்மாவில் இரண்டாவது நாளாக நீடிக்கும் மதக்கலவர வன்முறையில் நேற்றிரவு இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பர்மாவின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் முஸ்லீம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான வன்முறைகளில் இந்த இரு உயிர்பலிகள் நடந்திருக்கின்றன.

நகரில் சுற்றித்திரிந்த புத்த மத குழுக்கள் கடைகள், வாகனங்கள் மற்றும் மசூதிகளை அடித்து நொறுக்கியதை தடுக்க நூற்றுக்கணக்கான காவலர்கள் நகரில் பாதுபாக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ர்களுக்கும் ன் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு ஆணை முஸ்லீம் ஆண்களின் கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிச் சாய்த்ததாகவும், அதற்கு சில மணிநேரம் கழித்து காலைத்தொழுகைக்கு சென்றுகொண்டிருந்த முஸ்லீம் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நகரின் தற்போதைய மதக்கலவர வன்முறைகள் புதன் கிழமை இரவு துவங்கின. இரண்டு முஸ்லீம் ஆண்கள் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து இந்த வன்முறைகள் ஆரம்பித்தன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.

சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன.

இந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ரக்கைன் மாகாணத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.