சாதாரண மக்களை போலிஸார் கடுமையாக தாக்குவது குறித்து கண்டனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சாதாரண மக்களை போலிஸார் கடுமையாக தாக்குவது குறித்து கண்டனம் - காணொளி

இங்கு இந்த காணொளியில் இருக்கும் இரு காட்சிகளும், போலிஸ்காரர்கள் சாதாரண மக்களை தாக்குவது குறித்த காட்சிகளாகும்.

இந்த இரு காட்சிகள் குறித்தும் மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இதில் உள்ள முதல் காட்சி இஸ்ரேலிய போலிஸார் சம்பந்தப்பட்டது.

கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட பாலத்தீனச் சிறுவனின் ஒன்று விட்ட சகோதரனை இஸ்ரேலிய போலிஸார் தாக்குவதாக இந்த காணொளியில் காட்டப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான 15 வயதான தாரிக் காதிர் ஃபுளோரிடாவில் இருந்து வந்தவராவார்.

முகமூடி அணிந்து போலிஸ்காரர்களை தாக்க வந்த குழுவில் தாரிக் காதிரும் இருந்ததாக இஸ்ரேலிய போலிஸார் கூறுகிறார்கள். ஆனால், அவரது குடும்பத்தினர் அதனை மறுத்திருக்கிறார்கள்.

இந்தக் காணொளி குறித்து இஸ்ரேலிய போலிஸார் இப்போது புலனாய்வு செய்கிறார்கள்.

இரண்டாவது காணொளி அமெரிக்க போலிஸார் சம்பந்தப்பட்டது.

இதில் கீழே விழுந்து கிடக்கும் பெண்ணை போலிஸார் திரும்பத் திரும்ப தாக்குகிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மேற்கே நடு வீதியால் நடந்து, அந்தப் பெண் தனக்கும் கார்களை ஓட்டி வருபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாக போலிஸார் கூறுகிறார்கள்.