ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: நேபாள வெள்ளப் பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலி

18 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:32 ஜிஎம்டி

நேபாளத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐந்து நாட்களாகப் பெய்த பெரும் பருவமழை, குறிப்பாக சூர்க்கெட் பள்ளத்தாக்கு பகுதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் 150க்கும் மேற்பட்டோர் நேபாளத்தின் சீன எல்லைப் பகுதிக்கருகே நடந்த பெரும் நிலச்சரிவில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.