தம்மசேடி மணியை தேடும் பர்மியர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தம்மசேடி மணியை தேடும் பர்மியர்கள் - காணொளி

பர்மாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக காணாமல் போனதாகக் கூறப்படும் உலகிலேயே மிகவும் எடை கூடியதாகக் கூறப்படும் மணி ஒன்றை தேடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

தம்மசேடி மணி எனப்படும் இந்த மணி சுமார் 300 டன்கள் எடையுடையதாக நம்பப்படுகின்றது.

யன்கூனுக்கு அருகே 1608 ஆம் ஆண்ட்ளவில் இந்த மணி ஆற்றில் வீழ்ந்து மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னதாக இந்த மணியை தேடுவதற்கு பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதுவரை அவையெல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

யங்கூனில் இருந்து பிபிசியின் பர்மிய செய்தியாளர் ஜோனா பிஸ்ஸர் அனுப்பிய காணொளி.