ஈபோலா வைரஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஈபோலாவுக்கான தடுப்பு மருந்து - காணொளி

மேற்கு ஆப்பிரிக்காவில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்ற உயிர் கொல்லி வைரஸான ஈபோலாவுக்கான தடுப்பு மருந்து இப்போது சோதனையில் உள்ளது.

ஷீமாப் என்னும் அந்த மருந்து இதுவரை 18 பரிசோதனைகூடக் குரங்குகளிடம் சோதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசோதனை 100 வீத வெற்றியை தந்திருக்கிறது.

மனிதர்கள் மத்தியில் இனிமேல் சோதனை நடக்கவிருக்கிறது.

இந்த மருந்தின் முன்னைய மாதிரி ஒன்று 7 நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட்து. ஆனால், அதில் இருவர் இறந்துவிட்டார்கள்.

இவை குறித்து பிபிசியின் டிம் அல்மான் வழங்கும் காணொளி.