காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இந்திய பிரதமர் அமைச்சர்களுடன் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரிலுள்ள இராணுவ தளத்தில் நிகழ்ந்த தீவிரவாதாக்குதலுக்கு பதிலளிப்பது எவ்வாறு என்பது பற்றி விவாதிக்க தலைநகரான டெல்லியில் மூத்த அமைச்சர்களோடு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தி வருகிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அதிகாலையில் குண்டுகள் மற்றும் கிரனைட் கொண்டு இந்திய ராணுவ தளத்தை தாக்குதல்தாரிகள் தாக்கினர்

சமீபத்திய மிகவும் மோசமான இந்த தாக்குதலில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்ற இந்தியாவிலுள்ள பலர் இச்சம்பவத்தால் கோபமடைந்துள்ளனர்

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருக்கிறது என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு உறுதியாக மறுத்துள்ளது,

தொடர்புடைய தலைப்புகள்