தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கருணாநிதி உட்பட கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டி, திமுக தலைவர் கருணாநிதியும், பிற மாநில முதல்வர்களும், பிற அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தி.மு.க தலைவர் கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி

முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் கருணாநிதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பூச்செண்டுகளுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில், வேகமாக குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுவை முதல்வர் நாரயணசாமி

தமிழக முதல்வர் மிக வேகமாக குணமடைய வேண்டுகிறேன். பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் அவரை கூடிய விரைவில் மீட்டு கொண்டுவரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் பரிபூரணமாக குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மக்களின் பிரார்த்தனைகளும், இறைவனின் ஆசீர்வாதமும் உங்களுடன் எப்போதும் இருக்கும். விரைவில் குணமடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பொது செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அறிக்கை ஒன்றில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் பரிபூரணமாக குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.