ரஃபேல் ஜெட் போர் விமானங்களை வாங்க பிரான்ஸுடன் இந்தியா ஒப்பந்தம்

நவீன ரஃபேல் ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக, டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் வெஸ் லி ட்ரியனும் உடன்பாட்டில் கையழுத்திட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஃபேல் ஜெட்

கடந்த 18 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒன்பது பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த உடன்பாட்டின்படி, 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

Image caption ரஃபேல் ஒரு பார்வை

இந்த விமானங்கள் நவீன ஏவுகணைகளுடன் வரும். அவை அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும்.

போர் விமானத் திறனை அதிகரிப்பதன் மூலம், முக்கிய எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்தவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என இந்தியா நம்புகிறது.

அடுத்த 36 மாதங்களில் இந்த விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் விநியோகிக்கத் துவங்கும். 66 மாதங்களில் அது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்