தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் ஜெயலலிதா

படத்தின் காப்புரிமை Getty Images

காய்ச்சல் மற்றும் நீர்க்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

சனிக்கிமை முற்பகல் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் வழக்கமான உணவுகளை சாப்பிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வியாழக்கிழமை இரவு பத்தரை மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையைச் சுற்றி, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அந்தப் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். முதல்வர் வீடு திரும்புவதைப் பார்க்காமல் நாங்கள் வீடு திரும்ப மாட்டோம் என்று பல தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அங்கிருந்து செல்லாமல் காத்திருக்கிறார்கள்.

ஆனால், முதலமைச்சர் எப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்