உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு கோருகிறது திமுக

நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரி திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Image caption மின்னணு வாக்குப் பதிவு கோருகிறது திமுக

இது தொடர்பாக திமுக சார்பில் எஸ்.ஆர்.பாரதி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கில், திமுக தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜாராகி வாதாடுகிறார்.

திமுகவின் இது தொடர்பான மனுவில், வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தும் முறையில் முறைகேடு நடத்தப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் விரைவில் ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.