பாரமுல்லா இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல், ஒருவர் பலி

தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோரோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் காயமடைந்ததாகவும் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியிலுள்ள மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சமீபத்திய மாதங்களில் இந்திய பாகிஸ்தான் உறவு சீர்குலைந்துள்ளது

பாரமுல்லாவில் இருக்கின்ற இந்திய ராணுவ முகாமை தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை எறிந்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதால், இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை மூண்டதாக அவர் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊரி பகுதியில் இருந்த இந்திய ராணுவ தளம் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதிலிருந்து, காஷ்மீர் தங்களுடையது என்று உரிமை கொண்டாடும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் முறுகல் நிலை அதிகரித்து வருகிறது.

அந்த பகுதியில் தீவிரவாதத் தளங்களுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தி இருப்பதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை கூறியது.

தொடர்புடைய தலைப்புகள்