ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் ?

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்திலிருந்து மருத்துவர்கள் வந்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Image caption ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் ?

எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜி.சி. கில்னானி, மயக்க மருந்து நிபுணரான அஞ்சன் ட்ரிகா, இதயநோய் நிபுணரான நிதீஷ் நாயக் உள்ளிட்டவர்கள் இதற்கென சென்னை வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த மருத்துவ அணியினர், சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த ஊடகத் தகவல்களை எய்ம்ஸ் நிர்வாகம் பிபிசிக்கு உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ மறுத்துவிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்