2018க்குள் பாகிஸ்தான் உடனான எல்லைப்பகுதி முழுவதுமாக மூடப்படும்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பாகிஸ்தான் உடனான எல்லைகளை முழுவதுமாக அடைத்துவிடுவோம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நான்கு இந்திய மாநில அரசுகளுடன் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 3,250 கி.மீ தூரத்துற்கு பரந்து விரிந்துள்ள எல்லைப் பகுதியை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும், ஆயினும் குறிப்பிட்ட திட்டம் இன்னும் வகுக்கப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் தொடங்கிய பாதுகாப்பு நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்தும், வெறுப்பு விளைவிக்கிற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்