காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை, படையினர் ஒருவர் காயம்

படையினருக்கும், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோருக்கும் இடையே தொடர்ந்து வருகின்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படைப்பிரிவுகளை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இதே கட்டடம் பிப்ரவரி மாதமும் தாக்குதலுக்குள்ளானது

திங்கள்கிழமை காலையில் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள ஓர் அரசு கட்டடத்தில் சிறியதொரு ஆயுதக் குழுவினர் நுழைந்துவிட்டனர். சில மணிநேரம் சண்டை தொடர்ந்தது.

இதே கட்டடம் பிப்ரவரி மாதம் தாக்குதலுக்கு உள்ளானபோது துப்பாக்கிச் சண்டை இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

ஜூலை மாதம் இளம் பிரிவினைவாதி ஒருவர் இந்திய பாதுகாப்பு படைப்பிரிவுகளால் கொல்லப்பட்ட பின்னர், இம்மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்