கடுமையான மத நோன்பை அனுசரித்த 13 வயது சிறுமி மரணம்

ஒரு கடுமையான மத உண்ணாவிரதத்தை அனுசரித்த பின்னர், இறந்து போன 13 வயது சிறுமியின் குடும்பத்தினர் மீது தென் இந்தியாவின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Uma Sudhir
Image caption ஆராதனா சாம்தாரியாவின் மரணம் சமூக ஊடகங்களில் கடும் எதிரலைகளை எழுப்பியுள்ளது

ஹைதராபாத்தில் வாழ்ந்த பள்ளி மாணவி ஆராதனா மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் மட்டுமே குடித்து வந்துள்ளார்.

பின்னர் நிலைகுலைந்த அவர், மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது குடும்பம் சமண மதத்தை சேர்ந்தது. இந்த கடும் உண்ணாவிரதம் அதிஷ்டம் கிடைப்பதற்காக கடைபிடிக்கப்படும் புனித சடங்காகும்.

உண்ணாவிரதம் இருக்க இந்த சிறுமியை கட்டாயப்படுத்தி இருப்பதாக கூறி, சில குழந்தைகள் உரிமைக் குழுக்கள் சிறுமியின் குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இதனை இந்த குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்