இந்திய நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தான் விதித்த ஒட்டுமொத்த தடை இன்றுமுதல் அமல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தான் விதித்த ஒட்டுமொத்த தடை இன்று அமல்

பாகிஸ்தானில் இந்தியாவிலிருந்து ஒளிப்பரப்பாகும் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட முழு தடை இன்று முதல் அமலானது.

இந்த ஒட்டுமொத்த தடையானது பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பப்படும் அனைத்து இந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், பிரபல சீரியல்கள் மற்றும் பாலிவுட் திரைப்படங்களும் அடங்கும்.

பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தடையை தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ரேடியோக்கள் மீறி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக மூடப்படும் என்று பெம்ரா எனப்படும் பாகிஸ்தான் ஒளிபரப்பு ஆணையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்காசியாவில் இந்த அண்டை நாடுகள் இடையேயான உறவு சமீப மாதங்களில் மோசமடைந்துள்ளது.

தற்போது, ஊடகங்கள் அவர்களுடைய போர்க்களமாக மாறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்