இந்தியப் படையின் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 8 பேர் பலி

ம்மூ - காஷ்மீரில் கட்டுவாவில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு கோடு அருகே, 8 பாகிஸ்தான் படையினர், இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதல் நடவடிக்கையில் உயிரிழந்ததாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தொடரும் மோதல் நிலை

பாகிஸ்தானில் இந்தியாவிலிருந்து ஒளிப்பரப்பாகும் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட முழு தடை இன்று முதல் அமலானது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுவாவில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு கோரு அரேக பாகிஸ்தான் மற்றும் இந்தியா படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த எட்டு ரேஞ்சர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ராகேஷ் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும், அதில் பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்