கோவை தீ விபத்து சம்பவத்தின் மீட்புக்காட்சிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவை தீ விபத்து சம்பவத்தின் பரபரப்பு மீட்புக்காட்சிகள் அடங்கிய காணொளி

கோவை காந்திபார்க் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான ஐ ஏ எஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஐ ஏ எஸ் மற்றும் வங்கி பணி பயிற்சியில் சுமார் 150 மாணவ மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இந்த மையம் அமைந்துள்ள மூன்று தளங்கள் கொண்ட கட்டடத்தின் ஒரு தளத்தில் பட்டாசுகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் அறையிலிருந்து தீ மளமளவென மற்ற இரண்டு தளங்களுக்கும் பரவியது. தீ பிடித்ததும் அறைக்குள் இருந்தவர்கள் உடனடியாக தப்பித்து வெளியேறினர். மூன்றாவது தளத்தில் மட்டும் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் புகை மூட்டத்தால் மூச்சு தினறி மயக்கம் அடைந்தனர். தீ விபத்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து மூன்றாவது தளத்தில் மாட்டி கொண்டவர்களையும் மீட்டனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் மூச்சு திணறலால் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தொடர்புடைய தலைப்புகள்