மும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி மசூதியில் நுழைய பெண்களுக்கு இனி தடை இருக்காது

மும்பையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதி ஒன்று, பெண்களுக்காக முழுவதுமாக திறக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹாஜி அலி மசூதி

ஐந்தாண்டுகளுக்குமுன், மசூதியின் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு இந்த மசூதி தடை விதித்திருந்தது.

இன்னும் சில வாரங்களில் மசூதிக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று ஹாஜி அலி மசூதியை நடத்திவரும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மும்பை கடற்கரைக்கு அப்பால் உள்ள தீவில் இந்த மசூதி அமைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மும்பை கடற்கரைக்கு அப்பால் உள்ள தீவில் இந்த மசூதி அமைந்துள்ளது.

முன்னர், இந்த மசூதியில் அமைந்துள்ள ஆண் துறவிகளின் சமாதி அருகே பெண்கள் செல்வது பாவம் என கூறப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம், கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

பிரசார குழு ஒன்று இந்தக் கொள்கை மாற்றத்தை பெண்களின் உரிமைகளுக்கான வெற்றி என்கிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்