தன்னிச்சையான துப்பாக்கிச்சூடு: இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர குற்றச்சாட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற தன்னிச்சையான துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை நோக்கி இந்திய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் குழந்தை உட்பட பொதுமக்களில் இருவர் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருதரப்பும் பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.

ஆனால், அதனை உறுதிப்படுத்தவோ, யார் முதலில் சுட்டார்கள் என்பதை கண்டறியவோ இயலவில்லை.