டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி மாற்றம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக சபை தலைவராக பதவியிலிருந்து சைரஸ் பி.மிஸ்திரி மாற்றப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சைரஸ் மிஸ்திரி

இன்று நடைபெற்ற அந்த நிறுவனத்தின் நிர்வாக சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடாவை நிர்வாக சபை தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும், புதிய தலைவரை தேர்தெடுக்கவும் நிர்வாக சபை புதிய தேர்வு குழுவை அமைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடாவை நிர்வாக சபை தேர்ந்தெடுத்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த தேர்வு குழுவில் ரத்தன் டாடா, வேணு ஸ்ரீநிவாசன், அமித் சந்தரா, ரோனன் சென் மாற்றும் குமார் பட்டாச்சார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்னும் நான்கு மாத காலத்திற்குள் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவரை தேர்தெடுக்க தேர்வு குழு முடிவெடுத்துள்ளது

தொடர்புடைய தலைப்புகள்