காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: இருவர் பலி

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இரவு முழுவதும் நடந்த மோதல்களில் தங்கள் படையினரில் இருவர் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எல்லையில் மீண்டும் பதற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய படையினர் ரோந்து சென்ற போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இறந்த படை வீரரின் உடலை சிதைத்ததாகவும், பின்னர் அவர்கள் பாகிஸ்தானுக்குள் தப்பிச் சென்றதாகவும், இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இந்திய அதிகாரி கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் மற்றொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் இந்திய ராணுவ தளமொன்றின் மீது நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் பதற்றமாகவே உள்ளது.

மேலும், இவ்வியிரு தரப்புகளிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்