சிமி இயக்கம் குறித்து ஒரு கண்ணோட்டம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகர மத்திய சிறையிலிருந்து இன்று சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் தப்பிச் சென்று காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வேளையில், சிமி இயக்கம் குறித்த ஒரு கண்ணோட்டம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2008-ஆண்டில் கைது செய்யப்பட்ட சிமி இயக்க உறுப்பினர்கள்
  • உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகாரில் கடந்த 1977-ஆம் அண்டில் சிமி இயக்கம் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் முகமது அகமதுல்லா சிதிக்கி இதன் ஸ்தாபன தலைவராக அறியப்படுகிறார்.
  • ஆரம்ப காலங்களில் ஜமாத் இ இஸ்லமி இயக்கத்தின் மாணவர் அமைப்பாக தெற்காசிய பயங்கரவாத தளத்தால் இனம் காணப்பட்ட சிமி அமைப்பு, கடந்த 1981- ஆம் ஆண்டு தனியாக பிரிந்து சென்றது.
  • கடந்த 27 செப்டம்பர் 2001-இல் சிமி இயக்கம் முதல் முறையாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் பலரும் பொடா, தடா போன்ற பல கடும் சட்டங்களினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • ஒரு தீவிர இஸ்லாமிய அமைப்பை உருவாக்குவது சிமியின் முடிவான குறிக்கோளாக இருந்து வருகிறது.
  • சிமி இயக்கத்தின் மீதான தடை செப்டம்பர் 2003-இல் விலக்கப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அரசின் பரிந்துரையின்படி, சிமி இயக்கம் பிப்ரவரி 2006-இல் மீண்டும் தடை செய்யப்பட்டது.
  • கடந்த அக்டோபர் 2008-இல் டெல்லி உயர் நீதிமன்றம் சிமி இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய போதிலும், அதற்கு மறு நாளே மீண்டும் இந்த இயக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
  • இதனிடையே, ஜமாத் இ இஸ்லமி இயக்கத்தின் எஸ்.ஐ.ஓ என்ற தனது சொந்த மாணவர் அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • தங்களுக்கும் எந்த தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று எப்போதும் சிமி இயக்கம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய பிரதேச சிறைச்சாலையிலிருந்து சிமி இயக்கத்தினர் தப்பிப்பது இது முதல் முறையல்ல .
  • கடந்த 2013-ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் காண்ட்வா மாவட்ட சிறைச்சாலையிலிருந்து சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட 7 பேர், அங்கிருந்த 2 சிறை பாதுகாவலர்களை தாக்கி விட்டு, சிறைக் கழிப்பறை சுவரை உடைத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்