டெல்லியில் பரவும் விஷப் புகை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல்லிவாசிகளை அச்சுறுத்தும் நச்சுப்புகைக்கு எதிராக போராட்டம்

இந்தியத் தலைநகர் டெல்லியில் நச்சுக்காற்று அச்சம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கிறது. காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் காற்றின் தரம், 999 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது, பலமடங்கு காற்று மாசுபட்டிருப்பதாக அர்த்தம்.

இந்த நிலையில், டெல்லியில் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் இணைந்து விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி அவர்கள் முழக்கங்கள், இசைகளுடன் இந்தப் பேரணியை நடத்தினார்கள்.

காற்று மாசு காரணமாக, டெல்லியில் உள்ள பள்ளிகள் அடுத்த மூன்று தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.