நச்சுப்புகை உடன் வாழ்க்கை: தில்லிவாசிகள் போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

இந்தியத் தலைநகர் டெல்லியில் நச்சுக்காற்று அச்சம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கிறது. காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படத் தொகுப்பு.

Image caption டெல்லியில் காற்றின் தரம், 999 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது, பலமடங்கு காற்று மாசுபட்டிருப்பதாக அர்த்தம்.
Image caption தில்லியில் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் விழிப்புணர்வுப் பேரணி
Image caption சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி அவர்கள் முழக்கங்கள், இசைகளுடன் இந்தப் பேரணியை நடத்தினார்கள்.
Image caption காற்று மாசு காரணமாக, டெல்லியில் உள்ள பள்ளிகள் அடுத்த மூன்று தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Image caption உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை காட்டிலும் சுமார் 70 மடங்கு காற்று மாசு அதிகம்
Image caption ஐந்து தினங்களுக்கு தில்லியில் கட்டடம் கட்டுதல் மற்றும் இடிக்கும் பணிகளுக்கு தடை
Image caption தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் இதனை அவசரகால நிலைமை என்று வர்ணித்துள்ளார்.
Image caption சில பள்ளிகள் மாணவர்களை முகமூடி அணியும்படி அறிவுறுத்தி உள்ளது.
Image caption வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை நச்சுப்புகை உருவாகும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
Image caption அண்டை மாநிலங்களில் அடுத்த விளைச்சலுக்காக அறுவடை செய்யப்பட்ட வயல்கள் கொளுத்தப்படுவது நச்சுப்புகை உருவாகும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்