இந்தியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும்

படத்தின் காப்புரிமை Getty Images

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டு, வங்கிப் பணிகளும் ஒரு நாள் நிறுத்தப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், வரும் சனிக்கிழமை (நவம்பர் 12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13 ஆகிய இரண்டு தினங்களும் இந்தியா முழுவதும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அந்த இரண்டு தினங்களும் முழுமையான சேவைகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சுங்கக் கட்டணம் இடைநிறுத்தம்

படத்தின் காப்புரிமை AFP

இதனிடையே, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இடைநிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து சுங்கச்சாவடி பொறுப்பு நிறுவனங்களுக்கும் உரிய உத்தரவுகள் அனுப்பப்படுவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் சிரமத்துக்கு ஆளாகாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்