வங்கி சென்றவர்களுக்கு புதிய நோட்டுக்கள் கிடைத்ததா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் அலைமோதிய கூட்டம் (காணொளி)

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, இவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் இன்று வங்கிகளில் மக்கள் குவிந்தனர்.

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றில் இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இன்று வங்கிகள் திறந்தவுடன் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர்.

சென்னையில் உள்ள பல வங்கிகளில் காலை 8 மணி முதலே நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர். சென்னையில் உள்ள எமது செய்தியாளர்கள் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்