பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கவில்லை என பொதுமக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இன்று பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு (காணொளி)

இந்தியா முழுவதும் இன்று தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ஏடிஎம்) செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பல இடங்களில் அவை செயல்படாததால், மக்கள் மீண்டும் வங்கிகளையே நாடி வருகின்றனர்.

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என செவ்வாய்க்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வியாழக்கிழமை முதல் வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வெள்ளிக்கிழமை முதல் தங்கள் பண அட்டைகளைப் பயன்படுத்தி தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களில் பணத்தை எடுக்க முடியும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

இதனால், நேற்று வங்கிகளில் மக்கள் பணத்தை மாற்றுவதற்காகக் குவிந்தனர். இந்த நிலையில், இன்று அறிவிக்கப்பட்டதுபோல பெரும்பாலான ஏடிஎம் எந்திரங்கள் செயல்படவில்லை.

இதுகுறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார் எமது சென்னை செய்தியாளர் முரளிதரன்.

தொடர்புடைய தலைப்புகள்