புல்லட் ரயிலில் நரேந்திர மோதி; பணத்துக்காக மக்கள் அவதி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோதி ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும்போது, இங்கே இந்தியாவே வரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமலாக்கப்பட்ட பிறகு, மக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே கிடைப்பதால் ஏழை - நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

பணம் இல்லாததால், லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லையென்றும் சிறு வணிக நிறுவனங்களில் வியாபாரம் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிரதமர் மோதி ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, இங்கே இந்தியாவே வரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மாநில அரசிடமிருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லையென்றும் மீன்பிடித் தொழிலும் இந்தப் பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நவம்பர் 9ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த மு.க. ஸ்டாலின், நாட்டினுடைய பொருளாதார நிலையை உயர்த்த, இந்திய நாட்டினுடைய சீர்திருத்தத்திற்காக இந்த அறிவிப்பு உண்மையிலேயே உதவியாக இருக்கும் என்றால் ,திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இதை வரவேற்கக் கூடிய நிலையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்