அவசரகால நிலையை இந்தியா எதிர்கொண்டுள்ளது: மம்தா பானர்ஜி காட்டம்

இந்தியாவில் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு திடீரென திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்த நாடு ஓர் அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதலமைச்சர் மம்தா பானர்ஜி

வங்கியில் பணம் இருந்தும் அன்றாட தேவைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும், இதுவரை இப்படிப்பட்ட ஒரு சூழலை பார்க்கவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் 6 முதல் 7 மணி நேரம் வங்கிகளுக்கு முன்னால் நிற்பதாகவும், தட்டுப்பாடு காரணமாக அவர்களால் புதிய நோட்டுக்களை பெற முடியவில்லை என்றும் கொல்கத்தாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவிலிருந்து ஊழலை ஒழிக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்று என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்